சூடான செய்திகள் 1

சீகிரியாவில் பொலித்தீன் தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிதியம் கூறியுள்ளது.

அதன்படி எதிர்வரும் 01ம் திகதி முதல் அந்தப் பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து வருவது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று