சூடான செய்திகள் 1

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா – கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்று(29) மாலை கடற்படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காயமடைந்த 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டிணன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் மூவர் ஆற்றில் பாய்ந்து தப்பியோடிய நிலையில், ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.

ஆற்றில் குதித்து காணாமற்போனவர்களில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதுடன், மற்றுமொருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு