விளையாட்டு

ரயுடுவுக்கு பந்துவீச தடை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சரியாக 5 பந்தவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

இதன்போது ரயுடு பந்து வீசியதுடன் சர்ச்சைக்கு உள்ளானது.

ஐ சி சி விதிக்கு மாறாக அவர் பந்து வீசியதாக சர்ச்சை எழுந்தது.

ரயுடுவின் பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தும் வரை பந்துவீச ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

நியூசிலாந்து தொடரில் ஆடிவரும் ராயுடு, சர்வதேச கிரிக்கட்டில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்றால், தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தி ஐ சி சி விதிப்படி முறையாக பந்து வீசுவதை உறுதி செய்தாக வேண்டும். அதுவரை ரயுடு பந்துவீச முடியாது.

 

 

 

 

Related posts

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்