சூடான செய்திகள் 1

மாலியில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு

(UTV|COLOMBO)-மாலியில் ஐக்கிய நாடுகளது அமைதிப் படையில் பணியாற்றிய போது, கண்ணி வெடித் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மாலியின் மத்திய பகுதியில், கடந்த 25ம் திகதி இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 06 பேர் காயமடைந்தனர்.

இவ்வாறு உயிரிழந்த கெப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இவர்களுக்கு ஐ.நா மூலம், தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படும்.

படுகாயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஏனைய இரண்டு பேரும் சிறியளவிலான காயங்களுக்கே உள்ளாகியுள்ளனர்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில்

டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு