சூடான செய்திகள் 1

பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் மற்றொரு குரல் பதிவு சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO)-மத்தியவங்கி முறிகள் மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் திரிபுபடுத்தப்பட்ட மற்றுமொரு குரல் பதிவை இன்று (28) நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த குரல்பதிவை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்தியவங்கி முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பெர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித்ர தேவதந்திரி ஆகிய சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய, கசுன் பாலிசேன நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகச் சென்ற சந்தர்ப்பத்தில், இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி எனக் கூறப்படும் ஒருவர் தமது தரப்பினருக்கு இடையூறு விளைவித்ததாக கசுன் பாலிசேன சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி இதன்போது தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு நீதிமன்றம் குறித்த சந்தேகநபருக்கு உத்தரவிட்டிருந்தது.

 

 

 

Related posts

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு