சூடான செய்திகள் 1

விசேட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனபதி பிரஷன்சா விருது

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாராட்டு விழா இன்று(28) நடைபெறவுள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிக்காட்டிய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஜனபதி பிரஷன்சா’ ஜனாதிபதி பாராட்டு என்ற விருது வழங்கும் இந்த விழா ஜனாதிபதி தலைமையில் இன்று(28) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

2015 ஜனவரி 14ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், கட்டமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 1034 பேருக்கு ஜனாதிபதி அவர்களால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

 

 

 

 

Related posts

வவுனியாவில் நடந்துள்ள சோக சம்பவம்

இன்றைய வானிலை…

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது