வகைப்படுத்தப்படாத

எலியிலிருந்து பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்

கலிபோர்னியா: தென் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் புதியவகை ஆட்கொல்லி வைரசால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிலி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. எலியின் மூலமாக பரவுவதாக கூறப்படும் இந்த வைரசுக்கு ஹண்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரசின் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் வைரசால் பாதிக்கப்பட்ட 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் தாக்கப்பட்ட கிராமத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். ஹன்டா வைரசால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வைரஸ். விவசாயிகளைப் பெருமளவு தாக்கும். மனிதன் மூலம் மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சாதாரண வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏறபட்டு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து விடும். இறுதியில், மரணம் ஏற்படும். இந்த வைரஸ் தாக்கிய ஒருவர் தன் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற வகையில் பாதிப்பை உணர்வர். இவ்வாறு மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஷானியின் உயிருக்கு ஆபத்து [VIDEO]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

சிறுமியொருவரை நீருக்குள் இழுத்த கடற்சிங்கம்