சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

(UTV|COLOMBO)-மாவனல்லைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக கட்டிடங்களில் இன்று அதிகாலை இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம்

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…