வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று..

(UTV|INDIA)-70-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலங்கார வாகனங்கள், ஊர்வலத்தில் இடம் பெறவுள்ளன.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!