வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்ப காற்று தாக்குதல்…

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பல்வேறு வெப்ப நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 44 பேர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. இது 1939-ம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளதனால் பலவிதமான வெப்ப நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

வெப்பக்காற்று தாக்குதலால் தெற்கு ஆஸ்திரேலியாவில் 90 குதிரைகள் உயிரிழந்துள்ளதுடன்,பல உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

காலி வீதியில் தற்போது வாகன நெரிசல்

குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் நாவலபிட்டியில் சம்பவம்