(UTV|COLOMBO)-பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அடுத்த வாரம் முதல் நெல் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் விநியோகசபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், பெரும்போகத்தில் 1,50,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிணங்க, அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லை 38 ரூபாவுக்கும் சம்பா நெல்லை 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக நெல் விநியோகசபை குறிப்பிட்டுள்ளது.