வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜகார்த்தா சுகர்னோ ஹத்தா Soekarno Hatta விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கு  இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டின் பொது மக்கள் பயன்பாடு மற்றும் வீடமைப்பு அமைச்சர் Basuki Hadimuljono தலைமையிலான விசேட குழுவினரால் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல் கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகிறது.

இந்துசமுத்திர சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் அமைப்பின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரச தலைவர்களின் மாநாடு நாளை இந்தோனேசியாவில் ஆரம்பமாகவுள்ளது.இதற்கான தீர்மானம் 2015ம் ஆண்டுஇந்த அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்கவுள்ளதோடு மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்.

 

 

Related posts

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைப்பு

´ஜீடி´ கைது

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாசி இஞ்சி சூப்