(UTV|COLOMBO)-11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் மாதம் 06ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியன்த லியனகே முன்னிலையில் இன்று முன்னிலைபடுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் 12வது சந்தேகநபரை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில் , அது சாட்சியாளர்கள் முன்னிலையாகாததால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.