கேளிக்கை

பயிற்சி எடுத்த பிறகே நடிகர்கள் பாட வேண்டும்

(UTV|INDIA)-‘தி வாய்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பங்கேற்க உள்ளார். இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.
அதற்கான விளம்பரப் படப்பிடிப்பின் போது ரகுமான் தெரிவித்ததாவது:-
திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக பிசியாக இருக்கிறார்கள்.
ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றி தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.

Related posts

மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை

இந்தி சூப்பர்ஸ்டார் அமீருக்கும் கொரோனா

சின்மயியை சும்மா விடமாட்டேன்