கேளிக்கை

இந்தியில் ரீமேக் ஆகும் காஞ்சனா

(UTV|INDIA)- நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனராக அறிமுகமாகிய படம் முனி. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவருடன் வேதிகா, ராஜ்கிரண், உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் இயக்கினார். அந்தப்படமும் ஹிட்டானது. இதையடுத்து இதன் அடுத்த பாகத்தை காஞ்சனா2 என எடுத்தார்.

2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் கஞ்சனா3 படத்தை அவர் அறிவித்தார். ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, ஓவியா நடித்துள்ளனர். இந்நிலையில் காஞ்சனா ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்சய்குமார் நடிக்கவிருக்கிறார். சரத்குமார் வேடத்துக்கு பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. படத்தை ராகவா லாரன்ஸே ஹிந்தியில் இயக்கவிருக்கிறார்கள்.

 

 

 

 

 

Related posts

நேசமணியின் அந்த காமெடி காட்சி மட்டும் எத்தனை நாள் எடுத்தோம் தெரியுமா?

`காஞ்சனா 3′ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது