சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று(23) உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிரில் மற்றும் மூத்த பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்ததுடன், இந்த வழக்கை விசாரிப்பதற்காக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதாக நீதிபதிகள் குழாம் இன்று தெரிவித்தது.

அதன்படி வழக்கை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சரத் என். சில்வாவை நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 03ம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதியும் அவர் இதுபோன்று நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாகவும் மனுதாரர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று