சூடான செய்திகள் 1

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்

(UTV|COLOMBO)-மஹபொல புலமைப்பரிசில் நேரடியாக புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஹபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.

மஹபொல நிதியத்தின் ஊடாக இரு பிரிவுகளாக புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பராக்ரம பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த தவணைப் பணங்களை மாணவர்களின் வங்கிக் கணக்கிலங்கங்களுக்கே வைப்பிலிட்டதன் பின் குறுந்தகவலூடாக அதனை தெரியப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் , பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

சாகும் வரை உண்ணாவிரதமிருக்க தயார்