சூடான செய்திகள் 1

கொச்சிக்கடை,கட்டான பிரதேசங்களை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் கைது

(UTV|COLOMBO)-கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி வீடொன்றினுள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கி பணம் கொள்ளையிட்ட மூன்று பேரை காவற்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் கொள்ளையிட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவில் ஒரு தொகையினையும் , கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளியொன்றும் இதன் போது காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை மற்றும் கட்டான பிரதேசங்களை சேர்ந்த 32 , 36 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Related posts

சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகள் 10ம் திகதி முதல் [AUDIO]

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது