கேளிக்கை

எரிந்து சாம்பலான விஜய்யின் டிசைனர் சென்ற கார்!

(UTV|INDIA)-விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருபவர் பல்லவி சிங். இவர் விஜய்க்கு மட்டுமில்லாமல் சமந்தா, நாக சைதன்யா, அகில், அனிருத் போன்றோருக்கும் டிசைனராக உள்ளார்.

இந்நிலையில் அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தின் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது காரில் இருந்து தீப்பொறி வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காரை உடனே நிறுத்திவிட்டு பல்லவியும் கார் டிரைவரும் தூரமாக ஓடிவிட்டனர்.

எரிந்த காரில் தான் பல்லவியின் ஐடி கார்ட், பர்ஸ் போன்றவை எல்லாம் இருந்துள்ளது. மேலும் அந்த வழியாக தான் விஜய்யின் 63வது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சென்றுள்ளார். ஆனால் அது பல்லவி என தெரியாமல் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தம்பி படத்தில் பிரபுதேவா

சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா