சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UTV|COLOMBO)-பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை, கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு