சூடான செய்திகள் 1

பெற்றோல், டீசலின் விலை குறைப்பு

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் கூடியது.

இந்த கூட்டத்தின் போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , ஒக்டேன் 92 மற்றும் 95 வகை பெற்றோலின் விலை 2 ரூபாவினாலும் ,ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவினாலும் மற்றும் சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 125 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 123 ரூபாவாகும்.

149 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை , எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து  லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

அதன்படி , ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 131 ரூபாவாகவும் ,  ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 150 ரூபாவாகவும் ஐஓசி குறைத்துள்ளது.

மேலும், 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்திற்கு இருக்கைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்…

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி