டிக்-டாக் காணொளிகளுக்கு அடிமையானதால் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம் மாகி வரும் டிக் டாக், மியூசிக்கல் போன்றவற்றில் அவர்கள் எந்நேரமும் மூழ்கியுள்ளனர்.
தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை.
சிலர், இதனை தங்கள் திறமைகளை வெளி கொண்டு வரும் விதமாக பயன்படுத்து கின்றனர்.சிலர் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
அதுபோன்ற நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது, சமூக ஊடகமான டிக் டாக்கில் மெஸ்சிக்கோ- வை சேர்ந்த நீனாவை 2.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
இவரது நகைச்சுவைக் காணொளிகள் மிகவும் பிரபலமானவை. ஆனால், தொடர்ச்சியாக டிக்டாக்கில் இதே போன்று காணொளிகள் போட்டுவந்ததால் அவர் தற்போது, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.