சூடான செய்திகள் 1

இலங்கையில் அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய்…

(UTV|COLOMBO)-இலங்கையில் தற்போதுவரை அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய் தற்போது இரண்டு நாய்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கால்ல இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நோய் தற்போது முல்லைத்தீவு மற்றும் பலாங்கொடை பகுதியிலிருந்து மருத்துவத்திற்காக கொண்டுவரப்பட்ட நாய்களிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ட்ரிப்பனசொமா” எனப்படும் இந்த விசர்நாய்கடி தொற்று நோயானது ஆபிரிக்க நாடுகளில் உள்ள தொற்றுநோயாகும்.

குறித்த நாய்களின் இரண்டு கண்களும், வெள்ளை நிறமாக காணப்பட்டதுடன், உடல் மெலிந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நோய் மனிதர்களுக்கு பரவும் அச்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விலங்குகளுக்கு ஏற்படும் நோயிலிருந்து, மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து மிருக வைத்தியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கால்ல தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்