வணிகம்

வெளிநாடு செல்லும் பணியாட்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டில், வெளிநாடு சென்ற பணியாட்களின் எண்ணிக்கை 0.24 சதவிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் 211,502 பேர் பணியாட்களாக வெளிநாடு சென்றுள்ளதுடன், இவர்களில் 144,531 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது வெளிநாடு சென்ற மொத்த பணியாளர்களின் 68.3 சதவீதமாகும்.

2017 ஆம் ஆண்டில் 143,673 ஆண்கள் பணியாட்களாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு பணிப்பெண்களாக 68,319 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் 0.3 சதவீதமாக இது வீழ்ச்சி கண்டுள்ளது.

 

 

 

Related posts

இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு

தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்தை ஆதரிப்பது மேதினத்தில் தெளிவாகியுள்ளது

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு?