சூடான செய்திகள் 1

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-ஆசிரியர்களுக்கு இந்த வருடத்துக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

அத்துடன், ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை என
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவதற்காக கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 

 

 

 

Related posts

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை