வணிகம்

அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டின் அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய அலங்கார மீன்களை அறிமுகப்படுத்தல், இனப்பெருக்கம், நோய் பரவலைத் தடுத்தல், போசாக்கான மீன் வகைகளை உணவுக்காக அறிமுகப்படுத்தல் மற்றும் பண்ணையாளர்களை பயிற்றுவித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அலங்கார மீன் தயாரிப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, பொலன்னறுவை – செவனப்பிட்டிய மற்றும் புத்தளம் – பங்கதெனிய ஆகிய பகுதிகளில் இரண்டு அலங்கார மீன் மையங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

மருந்தக தொழிலாளர்களின் அயராத சேவையைப் பாராட்டும் SLCPI

உலக சந்தையில் தங்கத்தின் விலை..