சூடான செய்திகள் 1

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்

(UTV|COLOMBO)-மலேரியா நோயின் தாக்கம் சியம்பலாண்டுவ பகுதியில் அதிகரித்துள்ள நிலையில், குறித்த பகுதியில் மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, மலேரியா நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று(08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்;

“.. மலேரியா நோய் ஏற்பட்டுள்ளமையை கண்டறியும் பொருட்டு அப்பகுதியிலுள்ள மக்களை இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றோம். இதனூடாக மலேரியா நுளம்பின் பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பில் கண்டறிய முடியும்.

ஆனால் இதுவரையும் சியம்பலாண்டுவ பகுதியில் யாரும் மலேரியா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமை கண்டறியப்படவில்லை.

இதேவேளை டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு இப்பகுதிகளில் உள்ளதா என்பது தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தியுள்ளோம்..”

 

 

 

 

 

Related posts

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க தினம் குறிப்பு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது தாக்குதல்