வகைப்படுத்தப்படாத

வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிவரும் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.டி.முனி விசேட உரை நிகழ்த்தினார்.

பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கினார்.

பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தில் 30 வருட கால சேவையை பூர்த்தி செய்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான கௌரவ விருதுகளும் இதன்போது ஜனாதிபதியினால்; வழங்கி வைக்கப்பட்டன.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்விமான்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Warner நிறுவனத் தலைவர் பதவி விலகல்…

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

කේරල ගංජා තොගයක් සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට