(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் படாக்ஷான் மாகாணத்தில் நேற்று தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.
இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் பணியாற்றி கொண்டிருந்தபோது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.
இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.