சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-மொரட்டுவ மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த நால்வர் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்கு ஆதரவளித்து ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இன்று(03) இடம்பெற்ற மாதாந்த ஒன்று கூடலின் போது குறித்த நால்வரும் ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் குறித்த அக்கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 அதிகரித்துள்ளதுடன், எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைவடைந்துள்ளது.

ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணி ஆட்சி புரியும் மொரட்டுவ மாநகர சபையின் நடப்பு வருடத்திற்கான முதலாவது அமர்வு இன்று(03) இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் எம்பியாகிறார்!

editor

போதைப்பொருளுடன் மூவர் கைது

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து