விளையாட்டு

இலங்கை அணி 372 ஓட்டங்களை பெற்று வெற்றியை தம் வசம் ஆக்குமா?

(UTV|NEWZEALAND)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற உள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 372 ஓட்டங்களை பெற வேண்டும்.

 

 

 

 

Related posts

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று