(UTV|COLOMBO)-அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 17ம் திகதி மேற்கொள்ள கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.
வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்காமல், கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு அமைய செயற்படுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சீருடையை வழங்கும் போது இடம்பெற்ற ஊழல் மோசடியைத் தவிர்த்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தை இடைத் தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தச் சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.