வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

தாய்லாந்து மன்னர் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரை மணமுடித்து மகாராணியாக்கினார்-(PHOTOS)

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்