(UTV|COLOMBO)-இந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு தற்காலிகமானதாகும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 200 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இந்த மருந்துகளை உரியவர்கள் இறக்குமதி செய்யவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.