சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

(UTV|COLOMBO)-கடந்த தினத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , வௌ்ளப்பெருக்கால் பயிற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , மீண்டும் குறித்த வயல்களில் பயிற்செய்கையில் ஈடுபட விவசாயிகள் நடவடிக்கை எடுத்தால் , குமிழ் நெல்லை வாங்குவதற்கு 50 சதவீத மானியத்தை பெற்றுக்கொடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் , உர மானியமொன்றையும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா