(UTV|INDIA)-நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை ரசிகர்களே முடிவு செய்யும் வகையில் சமீபத்தில் டுவிட்டரில் மூன்று டைட்டில்கள் அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு செய்தார்கள் என்பதும், இந்த டைட்டிலை வரும் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் ‘சூர்யா 37’ டைட்டில் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி சரியாக 12.00 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கப்படவுள்ளதை அடுத்து, அடுத்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10க்கு ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.
சூர்யா நடித்து வரும் இன்னொரு படமான ‘என்.ஜி.கே. படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ள சூர்யாவின் ரசிகர்களுக்கு ‘சூர்யா 37’ படத்தின் அப்டேட் நிச்சயம் புத்தாண்டின் மகிழ்ச்சியான செய்தியாகவே கருதப்படுகிறது.
சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்