கிசு கிசுவிளையாட்டு

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் 4 வராங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும் போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி