சூடான செய்திகள் 1

20 வயது இளைஞன் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் கைது

(UTV|COLOMBO)-ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்களைக் இலங்கைக்குள் கடத்த முயன்ற நபர் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 20 வயதுடையவர் எனவும், அவர் இஹல கொட்ராமுல்ல பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபரிடம் இருந்து 100 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி சுமார் 1.1 மில்லியன் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த, கோட்டாபய ஆகியோரை சந்தித்தார்

editor

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor