சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்பம் தொடர்பில், ஆராயும் குழுவின் அறிக்கை தயாரிப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, இன்று(27) காலை 09.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

தற்போது குறித்த குழுவினால் பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பிலான வீடியோவானது பார்வையிடப்பட்டுள்ளதோடு குறித்த அறிக்கை தயாரிப்பானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குழப்பம் நிலவிய தினமன்று பதிவு செய்யப்படாத காணொளிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இன்று(27) கலந்துரையாட ஊடக நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழுவானது மீளவும் ஜனவரி மாதம் 03ம் திகதி மீளவும் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில் பிரதி சபாநாயகர் தவிர சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்துமபண்டார, சந்திரஸ்ரீ கஜதீர, பிமல் ரத்நாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

 

 

 

 

Related posts

முழு மானை விழுங்கிய இராட்சத பாம்பு!

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை…

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு…