சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலை-இன்று(27) குழு மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, இன்று (27) மீண்டும் கூடவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி குழுவை, சபாநாயகர் கருஜயசூரிய நியமித்திருந்தார்.

இதேவேளை, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமே, இந்தக் குழு இன்றையதினம் விசாரணைகளை மேற்கொள்ளும்.

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பாராளுமன்ற பணியாட்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைப்பு

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்