சூடான செய்திகள் 1

கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களால் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

(UTV|COLOMBO)-கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது நூற்றுக்கு 13 சதவீத அதிகரிப்பாகும ்என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாகன விபத்து காரணமாக 163 பேர் இந்த காலப்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது நூற்றுக்கு 18 சதவீத அதிகரிப்பாகும்.

எவ்வாறாயினும் , பட்டாசு விபத்துத்துக்களில் அனர்த்தத்துக்கு உள்ளானவர்கள் எவரும் இக்காலப்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய மருத்துவமனையின் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

 

Related posts

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

உலக தலசீமியா தினம் இன்று

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு