சூடான செய்திகள் 1

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வீதித் தடையை மீறி பயணித்த வேன் வாகனமொன்று மீது காவற்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை குடாவெல்ல சந்தியில் வைக்கப்பட்டிருந்த காவற்துறை வீதித் தடை ஊடாக பயணித்த வேன் வாகனத்தை நிறுத்துமாறு காவற்துறையினர் சமிஞ்சை அளித்துள்ளனர்.

எனினும் , குறித்த வேன் வாகனத்தின் சாரதி அதனை பொருட்படுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட போது காவற்துறை அதிகாரியொருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் , வேன் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வேன் வாகனத்தின் உரிமையாளரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

பாணந்துறையில் இரண்டு பேர் கைது

நாளை மற்றும் நாளை மறுதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – சுகாதார துறைக்கு பாரிய சிக்கல்!