கேளிக்கை

படபிடிப்பில் படுகாயம் அடைந்த தன்ஷிகா

(UTV|INDIA)-கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் தன்ஷிகா. பேராண்மை, அரவான், பரதேசி, உரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள யோகி டா படத்தில் நடித்து வருகிறார். கபாலி படத்தில் ஆண்கள்போல் ஹேர்கட்டிங் செய்து நடித்திருந்த தன்ஷிகா இப்படத்திலும் அதேதோற்றத்தில் நடிப்பதுடன் இதில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காக பயிற்சி பெற்று டூப் போடாமல் அவரே நடித்து வருகிறார்.

சமீபத்தில் சண்டை காட்சி ஒன்றின்போனது தன்ஷிகா மீது சில ரவுடிகள் பீர் பாட்டில் வீசுவதுபோல் காட்சி படமாக்க வேண்டியிருந்தது. அதற்காக ஸ்டன்ட் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது அவரை நோக்கி பீர் பாட்டில் வீச அது தவறி அவரது நெற்றியில்பட்டது. இதனால் அவரது நெற்றியிலும் கண்ணிலும் காயம் ஏற்பட்டதுடன் ரத்தம் வழிந்தது. வலி தாங்க முடியாமல் தன்ஷிகா அலறினார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பட குழுவினர் ஓடிச் சென்று அவருக்கு முதலுதவி அளித்ததுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

 

 

 

 

 

Related posts

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

‘குல் மகாய்’ ஜனவரியில்