சூடான செய்திகள் 1

பிவித்துரு ஹெல உறுமய குற்றப் புலனாய்வுப்பிரிவில்

(UTV|COLOMBO)-மாற்றப்பட்ட ஹன்சார்ட் அறிக்கையை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி, சபாநாயகருக்கு எதிராக பிவித்துரு ஹெல உறுமய தாக்கல் செய்த முறைப்பாட்டின் மேலதிக விசாரணைக்காக, அந்த கட்சியின் உறுப்பினர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் நெருக்கடி காலத்தில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்தபாராளுமன்ற பதிவேடான ஹன்சார்ட்டை, திரிபுப்படுத்தியதாக அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த முறைப்பாடு நவம்பர்  மாதம் 27ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முன்வைக்கப்பட்டது.

தற்போது இந்தவிடயம் குறித்த மேலதிக விசாரணைக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல