சூடான செய்திகள் 1

அலோசியஸ்-பலிசேன பிணை கோரிக்கை மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன எதிர்வரும் ஜனவரி 01ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது அரச தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மனுவை ஜனவரி 01ம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான் அன்றைய தினம் வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை