(UTV|INDIA)-ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது அசர்பெய்ஜான் நாட்டில் பாடல்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.
பாடல்கள் படப்பிடிப்புக்கு இடையே நாயகி நயன்தாராவிடம் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
செல்பிக்கு போஸ் கொடுப்பது, நயன்தாராவை கட்டிப் பிடிப்பது, கன்னத்தைக் குத்துவது என அந்த குழந்தை அழகாக வால்தனம் செய்கிறது. நயன்தாராவும் அந்த குழந்தையுடன் ஆசையோடும் அன்புடனும் விளையாடுகிறார். அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
#SK13onSpot Adorable ???? pic.twitter.com/153IZ7GnDD
— Nayanthara✨ (@NayantharaU) December 14, 2018