விளையாட்டு

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களைப் பெற்று 296 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

 

 

 

 

Related posts

ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க