சூடான செய்திகள் 1

பெலியத்த- சீதுவ பகுதிகளில் துப்பாக்கிப் பிரயோகங்கம்

(UTV|COLOMBO)-பெலியத்த மற்றும் சீதுவ பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பெலியத்த – கெட்டமான்ன பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பெலியத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் ஹத்போட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சீதுவ – லியனகேமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சீதுவ – ரந்தொலுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”