விளையாட்டு

லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம்…

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டியின் போது லஹிரு குமார பயன்படுத்திய தகாத வார்த்தைப் பிரயோகத்திற்காகவே அவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

அதன்படி போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும் புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல்

இலங்கையில் ‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ போட்டித்தொடர் விரைவில்