சூடான செய்திகள் 1

தேசிய ஜனநாயக முன்னணி உதயமாகும்

(UTV|COLOMBO)-“பாராளுமன்றத் தேர்தல் வந்தால், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அக்கட்சிக்கு, ஐ.தே.க செயற்குழுவில் அங்கிகாரத்தைப் பெறவுள்ளோம்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், கொழும்பு – காலி முகத்திடலில், நேற்று (17) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், “நெருப்புக்கு மத்தியில் இருப்பது தாச்சி… அப்பம் அல்ல… நெருப்புக்கு முகம் கொடுப்பது தாச்சி தான். எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம். சிறுபான்மை அரசைக் கொண்டிருந்த ஹிட்லர், அன்று உலகப் போர் முடியாவிட்டால்  பொதுத் தேர்தல் தான் வேண்டும் என்றிருப்பார் . ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர் நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது. இப்போது தேர்தலை கேட்கின்றனர். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால், ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை. அரசமைப்பை மீறி, அரசமைப்பை பாதுகாக்க முடியாது” ” என்றுக் கூறினார்.

“இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டைப் பிரிப்பதாக இருபது வருடமாக கூறுகின்றனர். நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும், ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். நீதிமன்றச சுயாதீனம் ஏற்படுத்தியதால் தான், இன்று எல்லோருக்கும் நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை வந்தது. எங்கள் மீது குறை இருந்தால் சொல்லுங்கள்” என்று, பிரதமர் மேலும் கூறினார்.

 

 

 

 

 

Related posts

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்

அலோசியஸ், பலிசேன பிணை வழக்கு 18 ஆம் திகதி…